இலங்கை

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று புதிய சாதனை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் இன்று (26) வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வை எட்டியது.

அதன்படி, இன்றைய நாள் வர்த்தக நடவடிக்கைகளின் நிறைவில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 17,740.46 அலகுகளாக பதிவாகியுள்ளது.

ஜூன் 12 ஆம் திகதி அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 17,661.5 வரலாற்றில் அதிக அலகுகளாக பதிவாகியிருந்தது.

இந்நிலையில் இன்றைய வர்த்தக நடவடிக்கைகளின் நிறைவில் S&P SL20 குறியீடு 46.34 புள்ளிகள் உயர்வடைந்து, 5,265.35 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இன்றைய நாளில் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.85 பில்லியன்களாக பதிவு செய்யப்பட்டது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…