சினிமா

Worldwide பாக்ஸ் ஆபிஸ் விவரம்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே 1 ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். இப்படத்தில் ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது.

இந்த நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இப்படம் இறுதியாக ரூ. 91 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் ரூ. 67 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 15 கோடி வசூல் செய்து 2025 ஆம் ஆண்டு ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ளது.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…