இலங்கை

டெங்கு ஒழிப்பு 396 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

நேற்று 13,642 வளாகங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய 3,886 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

382 இடங்கள் நுளம்பு குடம்பிகள் அதிகளவில் பெருகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…