இந்தியா

கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா தீர்மானம்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா அரசாங்கம் பெறவேண்டும் என்று தமிழக வெற்​றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக வெற்​றிக் கழகத்​தின் செயற்​குழு கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

கூட்​டத்​துக்கு கட்​சி​யின் தலை​வர் விஜய் தலைமை தாங்​கி​னார். பொதுச் செய​லா​ளர் ஆனந்த உட்பட கட்சி மாநில நிர்​வாகி​கள் மாவட்ட செய​லா​ளர்​கள், மாநில செயற்​குழு உறுப்​பினர்​கள், சிறப்​புக் குழு உறுப்​பினர்​கள் பங்​கேற்​றனர்.

இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொள்கை எதிரி​களு​டனோ பிளவு​வாத சக்​தி​களு​டனோ என்​றும் நேரடி​யாகவோ மறை​முக​மாகவோ கூட்​டணி இல்லை முதல்வர் வேட்பாளர் விஜய் என்பன உள்​ளிட்ட 20 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…