இலங்கை

மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை இன்று (7) அதிகாலை பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

மன்னாரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (DCDB) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அண்மித்த 30ஆவது காற்றாலை கோபுரத்திற்கு அருகே காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்த கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…