இந்தியா

குஜராத் பாலம் விபத்து : பலி எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு

குஜராத் பாலம் விபத்து : பலி எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு
குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைந்துள்ளது. வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது.

பாலம் இடிந்து விழுந்ததால் அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மாஹி ஆற்றில் இருந்து மேலும் 7 சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. இதையடுத்து, பாலம் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மாயமான 4 பேரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக மாநில வீதிகள் மற்றும் கட்டிடத் துறையைச் சேர்ந்த 4 பொறியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…