இந்தியா

பாஜக கூட்டணிக்கு விஜய் வர வாய்ப்புள்ளதா? – அமித் ஷா விளக்கம்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமித் ஷாவிடம், உங்கள் கூட்டணியில் த.வெ.க. தலைவர் விஜய் வர வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அமித் ஷா, “நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம்” என்று பதில் அளித்தார்.

இதேவேளை, பாஜகவிடம் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று விஜய் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில்

டெல்லியின் காற்றின் தரக் குறியீடு இன்று (17) காலை 329 புள்ளிகளில் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவலின்படி, டெல்லி முழுவதும் உள்ள அனைத்து கண்காணிப்பு நிலையங்களிலும் காலை 7 மணி நிலவரப்படி காற்றின் தரக்…