உலகம்

பிரமாண்ட Tomorrowland திருவிழா மேடையில் தீ விபத்து

பெல்ஜியத்தின் உலகப் புகழ்பெற்ற Tomorrowland திருவிழா வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் பிரதான மேடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இதனால் முக்கிய நிகழ்ச்சிப் பகுதி சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்து இருந்தபோதிலும், நிகழ்வு திட்டமிட்டபடி தொடரும் என்றும், டிரீம்வில்லே முகாம் தளம் மற்றும் பிற திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் நடைபெறும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் வௌியாவில்லை.

விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், சேத விபரங்கள் தொடர்பில் அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…