உலகம்

நடுவானில் தீப்பிடித்து எரிந்த இராட்சத பலூன் – 8 பேர் பலி

பிரேசிலில் இராட்சத பலூன் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பலூனில் 21 பேர் இருந்ததாகவும், சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இராட்சத பலூனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதுடன், அதனை இயக்குபவர் பலூனை கீழே இறக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.

பலூனில் இருந்த பலர் வெளியே குதித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்நாட்டு அரசு…