No products in the cart.
ரோஹித அபேகுணவர்தனவின் மகள் பொலிஸாரிடம் சரண்
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தனவின் புதல்வி மெலனி குணவர்தன பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள லாண்ட் குரூசர் ஜீப்பை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு விற்னை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரோஹிதவின் மகள் மெலனி மற்றும் அவரது கணவரை கைது செய்யுமாறு மத்துகம நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் சில நாட்களாக தலைமறைவாகியிருந்தவர்
தற்பொழுது மெலனி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
இந்த இருவருக்கு எதிராகவும் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத்தடை விதிதிருந்ததுடன் பொலிஸார் கைது செய்யும் நோக்கில் தேடுதல் மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரோஹிதவின் மகள் மெலனி, பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
மெலனியை பொலிஸாரிடம் நீதிமன்றில் முற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
















