இலங்கை

விஜித கூறிய சுற்றுலா வருவாய் தொடர்பில் பிரதி அமைச்சர் கூறிய கதை

கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமை தொடர்பாக, சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க நேற்று (04) தெளிவுபடுத்தினார்.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, ஜூன் 2025 இறுதிக்குள் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்தத் தரவில் ஜூலை மாதத்திற்கான வருமானம் சேர்க்கப்படவில்லை என்றும், ஜூலை மாதத்தை சேர்த்தால் கூட இவ்வளவு வருமானம் ஈட்டப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…