No products in the cart.
அரசு அலுவலகங்களில் பென் டிரைவ்கள் மற்றும் வட்ஸ்எப் பயன்படுத்த தடை
ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ்கள் மற்றும் வட்ஸ்எப் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டது.
அரசாங்க தகவல்களைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், பென் டிரைவ்களை இனி அரசாங்க நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது.
அதிகாரப்பூர்வ தகவல்களை வட்ஸ்எப் அல்லது பிற சமூக ஊடக தளங்களில் பகிரக்கூடாது.
பதிலாக தரவு பகிர்வுக்கு கிளவுட் அடிப்படையிலான GovDrive தளத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே இணங்கத் தவறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.
மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஜம்மு காஷ்மீரில் மின் துறை தொடர்பான பல அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு ஆளான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக மத்திய மின்சார அமைச்சர் மனோகர் லால் கட்டார், இந்தியா முழுவதும் மின்சாரத் துறை சுமார் இரண்டு இலட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.