No products in the cart.
மற்றுமொரு மூதாட்டி படுகொலை
வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் உடகஹவத்த பகுதியில், 85 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச் சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண், உடகஹவத்த பகுதியைச் சேர்ந்தவர் மற்றும் தனியாக வீட்டில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு, அவரது மகன் உணவு வழங்கிவிட்டு வெளியேறிய பின்னர், வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் இந்தக் கொலையை மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய வலஸ்முல்ல பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.