No products in the cart.
ஜனாதிபதி அநுர இன்று யாழ் விஜயம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வருகத்தந்துள்ளார் .
அவர் அங்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளைத் தொடக்கி வைக்கவுள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுக்காகவே அவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தந்துள்ளார் .
ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலின்படி, இன்று காலை 8.30 மணிக்கு மயிலிட்டியில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார் .
இதைத் தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவுக்குச் செல்லும் ஜனாதிபதி அநுரகுமார, வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்புப் பணியைத் தொடக்கி வைப்பார். அத்துடன், தென்னை முக்கோண வலயப் பணிகளையும் அவர் ஆரம்பித்து வைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது .