No products in the cart.
வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று (01) ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றி வெளியிட்ட அவர், தான் கைது செய்யப்பட்ட தருணத்திலிருந்து சமூக ஊடகங்களில் தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
அனைத்து தரப்பினரையும் பின்னர் சந்திக்க உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி அந்த உரையில் குறிப்பிட்டுள்ளார்.