இலங்கை

சதீஷ் கமகே மீண்டும் விளக்கமறியலில்

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று (2) உத்தரவிட்டுள்ளார். 

சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வழக்கின் விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையினை அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பல்வேறுபட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். 

இதனையடுத்து அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…