இலங்கை

100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய திட்டத்தின் முதல் கட்டம் ஆரம்பம்

100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய திட்டத்தின் முதல் கட்டமான ‘Dream Destination’, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இன்று (02) தல்பே ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் ரயில் நிலையங்களை உலகத் தரத்துடன் ஒப்பிடத்தக்க வகையில் புதிய அடையாளத்துடன் மேம்படுத்துவதற்காக, அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.

பொது போக்குவரத்தை உயர்தர சேவையாக மாற்றுவதற்கான பொறுப்பை தற்போதைய அரசாங்கம் கைவிடாது என்றும், அதை தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். 

மேலும், பொது போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாத் துறையை வளர்க்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையை ஒரு பணியிடமாக மாற்றி, விரைவான வளர்ச்சியை அடைய இத்திட்டம் உதவும் என்றும் அவர் கூறினார்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…