இந்தியா

உயிரிழந்தோரின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் என்ற மாகாணம் மலைகள் நிறைந்த இடமாகும். இது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாகும். இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை.

கடந்த 31 ஆம் திகதி இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

 அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800 இற்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…