No products in the cart.
நடிகர் பிரகாஷ்ராஜ் நாட்டிற்கு வருகை
நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
“நியேலினி” உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் “Song of Resilience” என்ற மாற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயம் தொடர்பாக கலந்துரையாடும் “நியேலினி” உலகளாவிய மாநாடு, உலகின் 102 நாடுகளைச் சேர்ந்த 500 விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளின் பங்கேற்பில் கண்டியில் உள்ள பொல்கொல்ல கூட்டுறவு கலையரங்கத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.