No products in the cart.
அஜித்குமார் எடுத்த அதிரடி முடிவு!
’குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக தனது ரேஸ் காரில் சிறப்பு லோகோவை அச்சிட நடிகர் அஜித் முடிவு செய்துள்ளார்.
’குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றது.
அண்மையில் ஜெர்மனியில் நடந்த கார் பந்தயத்தின்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய அஜித்குமார், நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியன் ஆவார்கள் என்ற கருத்தை முன் வைத்தார்.
இந்நிலையில், தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் அறிவித்துள்ளார். இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக இவ்வாறு செய்ய உள்ளார்.