No products in the cart.
தவெகவின் அடுத்தகட்ட நகர்வு!
இந்தியாவின் தமிழகம் முழுவதும் வரும் 13 ஆம் திகதி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் பொலிஸார் அதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க மீண்டும் மனு அளிக்கப்பட்டது. அதனையும் பொலிஸார் நிராகரித்துள்ளனர். 2 ஆவது முறையாக அனுமதி மறுக்கப்பட்டதால் மாற்று இடம் குறித்து தவெகவினர் ஆலோசனை நடத்தினர்.
அந்த வகையில் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
3 ஆவது முறையும் காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை அணுகவும் தவெகவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்க அனுமதி மறுத்ததால் சென்னையில் டிஜிபியை நேரில் சந்தித்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.