No products in the cart.
ஜனாதிபதி வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலத்தின் விவாதம் நாளை
ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு மீதான விவாதத்தை நாளை (10) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதியில் குறித்த விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.