இலங்கை

தியவடன நிலமே நியமிக்கப்பட்டமைக்கு எதிரான மனு விசாரணைக்கு

கண்டி தலதா மாளிகையின் பதில் நிலமேவாக முன்னாள் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல செயல்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை இந்த மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) தீர்மானித்தது. 

கம்பளையைச் சேர்ந்த சாலிய பிரசாத் நந்தசிறி என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் இந்த மனு இன்று அழைக்கப்பட்டது 

இந்நிலையில் குறித்த மனுவின் உண்மைகளை உறுதிப்படுத்த இந்த மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

பௌத்த அலுவல்கள் விவகார ஆணையாளர், முன்னாள் தியவடன நிலமே நிலங்க தேல உள்ளிட்ட சிலர் மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…