No products in the cart.
லோகா பட நடிகைக்கு தந்தையின் அட்வைஸ்
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமான ”லோகா”,பொக்ஸ் ஒபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் டொமினிக் அருண் இயக்கியுள்ள இந்தப் படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
உலகளவில் ரூ. 200 கோடி மைல்கல்லை எட்டி ”லோகா” சாதனை படைத்திருக்கிறது.
இந்த மைல்கல்லை எட்டிய 4-வது மலையாளப் படம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது.
இந்நிலையில், ”லோகா” படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தனது தந்தை பிரியதர்ஷன் அனுப்பிய குறுஞ்செய்தியை நடிகை கல்யாணி பகிர்ந்துள்ளார்.
தந்தை அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில்,
“ஒரு விஷயத்தை நினைவு வைத்துக்கொள். வெற்றியால் தலைக்கனம் வந்துவிடக் கூடாது. தோல்வியால் மனம் துவண்டுவிடக் கூடாது. இதுதான் என்னால் உனக்குத் தர முடிந்த சிறப்பான அறிவுரையாக இருக்கும்.. லவ் யூ” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.