சினிமா

நாஞ்சில் விஜயன் கொடுத்த விளக்கம்

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர்கள் பலர். 

அப்படி காமெடி சீன்கள் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நாஞ்சில் விஜயன். இவர் குறித்து திருநங்கை வைஷ்ணவி ஒரு பரபரப்பு புகார் அளித்திருந்தார். 

தன்னை நாஞ்சில் விஜயன் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு எல்லாம் வைத்துக்கொண்டு தற்போது வேண்டாம் என்றால் என்ன அர்த்தம் என்றும், புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்தார். 

வைஷ்ணவி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நாஞ்சில் விஜயன் மற்றும் அவரது மனைவி மரியா வீடியோ வெளியிட்டுள்ளனர். 

அதில், ஏன் வைஷு இப்படி பண்ணீங்க, என் கணவரை இப்படி கொச்சை படுத்திட்டீங்க வெளியில் தலைகாட்ட முடியல. எங்க ரெண்டு பேர் நடுவில் பிரச்சனை வரதுக்காக இப்படி பண்றீங்களா? என கூறியுள்ளார். 

மேலும் நாஞ்சில் விஜயன் பேசும்போது, எனக்கும் வைஷுவிற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது, நான் அவரை ஒரு சகோதரி, தோழியை போலதான் பார்த்தேன். என் மீது அவர் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என்றார்.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…