இலங்கை

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் அதிகார துஷ்பிரயோகங்கள் ஊழல்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமை வியாழக்கிழமை (11) இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அங்கு சென்று பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதன்போது மாநகர சபையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு முறையற்ற ஆட்சேர்ப்பு வளங்கள் மீதான துஷ்பிரயோகம் முறையற்ற கேள்வி கோரல்கள் வாகன பராமரிப்பில் துஷ்பிரயோகம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. 

மேலும் கடந்த காலங்களில் குறித்த மாநகர சபையில் கடமையாற்றிய ஆணையாளர் உட்பட உயரதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்தும் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன் அவை தொடர்பிலான கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய ஆவணங்கள் உட்பட ஆதாரங்கள் திரட்டப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தவிர கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…