No products in the cart.
வாகனம் மோதியதில் குடும்பப் பெண் பலி!
மகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த தாயார் மகேந்திரா வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
31 ஆம் கட்டை, முழங்காவிலைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான கமல் நகுலமலர் (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி குடும்பப் பெண், நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில், தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்ற மகளை அழைத்துக் கொண்டு முழங்காவில் வீதியின் இடப் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த மகேந்திரா வாகனம் அவரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்று முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குடும்பப் பெண் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு இரவே உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை முழங்காவில் காவல்துறையினர் நெறிப்படுத்தினர்.