உலகம்

நிறைய செய்துவிட்டேன்…. ஒப்புக்கொண்ட ட்ரம்ப்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமை காட்டியுள்ளார்.

இது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி இருப்பதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து அவர், ‘இந்தியா மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கிறது. ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தேன்.

இது எளிதான காரியம் அல்ல. அது மிகப்பெரிய விஷயம். அது இந்தியாவுடன் விரிசலையும் ஏற்படுத்தி விட்டது. ஆனாலும் அதை செய்தேன். நிறைய செய்துவிட்டேன்’ எனக்கூறினார்.

இந்த பேட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…