No products in the cart.
கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர்!
சமீபத்தில் ரிலீஸ் ஆன ரஜினியின் கூலி படத்தில் ஒரு சின்ன ரோலில் கன்னட நடிகர் உபேந்திரா நடித்து இருந்தார்.
ரஜினி உடனே இருக்கும் ஒரு ரோலில் அவர் தோன்றி இருந்தார். இருப்பினும் கிளைமாக்ஸில் மட்டுமே அவருக்கு காட்சிகள் இருந்தது.
நடிகர் உபேந்திரா இன்று (15) ஒரு வீடியோ வெளியிட்டு தனக்கும் தனது மனைவிக்கும் நடந்த சம்பவம் பற்றி கூறி இருக்கிறார்.
மெசேஜில் வந்த லிங்க் க்ளிக் செய்ததால் உபேந்திராவின் மனைவி போன் ஹேக் ஆகிவிட்டதாம், மேலும் தனது போனும் அதே போல ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது.
அதனால் எங்கள் நம்பரில் இருந்து பணம் கேட்டு அழைப்பு வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என உபேந்திரா கேட்டுக்கொண்டிருக்கிறார்.