சினிமா

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி எப்போது அமையும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, கிடைத்த படம்தான் மதராஸி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி திரைக்கு வந்தது. 

அன்றில் இருந்து இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளாக பார்த்து வருகிறோம். கலவையான விமர்சனங்கள் படத்தின் வசூலை சற்று பாதித்து இருந்தாலும் கூட தமிழகத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மதராஸி திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, இப்படம் 10 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 54.4 கோடி வசூல் செய்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் மதராஸி உட்பட 9 திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…