இலங்கை

நவீன மயமாகவுள்ள மருதானை ரயில் நிலையம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், Dream Destination திட்டத்தின் கீழ் மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

வளமான நாடு – அழகான வாழ்க்கையை உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி நிலைபேறான, நவீன மற்றும் தரப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து கட்டமைப்புடன் கூடிய அழகான வாழ்க்கை முறையை அடைவதற்காக, ரயில் நிலையங்களில் பொது வசதிகளை மேம்படுத்தல், ரயில் நிலையங்களை வசதியான மற்றும் பாதுகாப்பான இடங்களாக மாற்றும் நோக்கத்துடன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் Clean Sri Lanka வேலைத்திட்டம், தேசிய புத்திஜீவிகள் அமைப்பு (NIO Engineering) அரச – தனியார் பங்களிப்பின் கீழ் நாட்டில் நூறு புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பு மற்றும் வசதியை வழங்கும் சுத்தமான, அழகான புகையிரத நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து மருதானை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார். 

கட்டுப்பாட்டு அறை உட்பட பல இடங்களையும் அவர் பார்வையிட்டார். 

ரயில் திணைக்களத்திற்கே உரித்தான ருஹுனு குமாரி என்ற புதிய சிங்கள கணினி எழுத்துருவும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையமாக கருதப்படும் மருதானை புகையிரத நிலையம், கொழும்பு மாவட்டத்தில் இரண்டாவது பெரிய புகையிரத நிலையமாக கருதப்படுகிறது. 

இந்த நவீனமயமாக்கல் பணிகள், இதன் புராதனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ளப்பட உள்ளன. 

இந்த நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அன்றாட போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரதான வழிமுறையான புகையிரத சேவை குறித்து பொதுமக்களின் நம்பிக்கையை வளர்ப்பது அவசியமாகும் எனத் தெரிவித்தார். 

செயற்திறன்மிக்க மற்றும் வினைத்திறனான புகையிரத சேவையைப் பேணுவதும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும், புகையிரத தொழிற்சங்கங்கள், பயணிகள் மற்றும் பிரதேச மக்கள், தனியார் துறையினர் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், அதற்காக எதிர்காலத்தில் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…