சினிமா

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர்

சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் ரோபோசங்கர் நேற்று (16) மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. 

இதையடுத்து அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

ரோபோ சங்கரை பரிசோதித்த வைத்தியர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் வைத்திய சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் ரோபோ சங்கர் வைத்தியர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். 

இது குறித்து அவரது மனைவி தெரிவிக்கையில், 

‘தொடர் படப்பிடிப்பு காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வைத்தியசாலையில் 2 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற வைத்தியர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர் என்றார். 

ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார். 

மீண்டும் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…