இலங்கை

சம்பத் மனம்பேரி தடுத்து வைத்து விசாரணை

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்தேகநபர் இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

இந்நிலையில் அவரை எதிர்வரும் 7 நாட்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய வலஸ்முல்ல நீதவான் மல்சா கொடித்துவக்கு சற்றுமுன்னர் உத்தரவிட்டார்.

அண்மையில் மித்தெனிய பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி கடந்த 15ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…