இலங்கை

ஜனாதிபதி அநுர நாளை அமெரிக்காவுக்கு விஜயம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்க நோக்கி புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் உடன் பயணிக்கவுள்ளார்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…