உலகம்

நேபாள சிறையிலிருந்து தப்பி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 5 பேர் கைது

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இளைஞா்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பிகாரில் கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் நால்வா் சூடானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் பொலிவியா நாட்டவா் ஆவாா். நேபாளத்தில் பல்வேறு சிறைகளில் 15,000-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா்.

அண்மையில் அங்கு நடைபெற்ற இளைஞா்கள் போராட்டத்தில் வன்முறை மூண்டது. இதனைப் பயன்படுத்தி சிறையில் இருந்தும் பலா் தப்பினா். இவா்களில் சிலா் எல்லைதாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனா்.

இது தொடா்பாக அந்நாட்டு அரசு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தது. அதன்படி பிகாா் காவல் துறையினருக்கு நேபாள சிறையில் இருந்த தப்பியோா் விவரம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்படி காவல் துறையினா் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா். அப்போது மோதிஹாரி பகுதியில் பதுங்கியிருந்த 5 வெளிநாட்டவா் கைது செய்யப்பட்டனா்.

வன்முறையைப் பயன்படுத்தி நேபாள மத்திய சிறையில் இருந்த தப்பி இந்தியாவுக்குள் நுழைந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

அவா்கள் இப்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளனா். மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.  

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…