சினிமா

நடிகை ராதிகாவின் தாயார் மறைவு

மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகா – நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான கீதா ராதா தனது 86 வயதில் காலமானார். 

உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று (21) மாலை அவர் காலமானார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இன்று (22) மாலை 4.30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. கீதா ராதா மறைக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…