No products in the cart.
தீபாவளி ட்ரீட் ரெடி! ஜனநாயகன் குறித்து வௌியான தகவல்
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘ஜன நாயகன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளதாகவும், இப்பாடலுக்கு விஜய் குரல் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.