இலங்கை

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வன்முறைச் செயல்கள் தொடர்பாக ஒரு முறைப்பாடும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான 179 முறைப்பாடுகளும் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளன.

இதுவரை பெறப்பட்ட 180 முறைப்பாடுகளில் 133 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 47 முறைப்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆணைக்குழு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…