No products in the cart.
விஜய் குறித்து பேச திமுக தடை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து பேச, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேலிடம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து ஆண்டு இடம்பெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றார்.
மக்கள் சந்திப்புகளின் போது தமிழக முதலமைச்சரையும், தமிழக அரசையும் விஜய் கடுமையாக சாடி வருகின்றார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தி.மு.க., நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ கூட்டத்தில் விஜய் குறித்து பேசுவதற்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் காந்தி, தமிழக் வெற்றிக் கழகம் குறித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் எங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால், அதற்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம்’ என மேலிடத்தின் உத்தரவை அமைச்சர் காந்தி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் விஜய் குறித்து பேசுவதற்கு மேலிடம் தடை விதித்துள்ளமையை வெளிப்படையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.