சினிமா

ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிரான உத்தரவுக்கு தடை

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுதத்தீன் தாகர். 

இவர், பொன்னியின் செல்வன் 2-ல் வரும் ‘வீர ராஜ வீரா’ என்ற பாடல் தனது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் மீது காப்புரிமை மீறல் வழக்கு ஒன்றை டெல்லி மேல் நீதிமன்றில் தொடர்ந்து இருந்தார். 

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி மேல் நீதிமன்றின் தனி நீதிபதி இடைக்கால தீர்ப்பு வழங்கினார். 

அதில், “வீர ராஜ வீரா பாடல் ஈர்ப்பினால் உருவாக்கப்பட்டதாக இல்லை. ஆனால் உண்மையில், அதன் உள்ளீடு, உணர்வுகள் மற்றும் பாடல் கேட்கும்போது ஏற்படும் தாக்கத்தில் சிவ ஸ்துதியை ஒத்துள்ளது. 

பாடலில் வேறு சில கூறுகளை சேர்ப்பது, பாடலை ஒரு நவீன இசையமைப்பைப் போல மாற்றி இருக்கலாம். ஆனால், அடிப்படை இசையமைப்பு ஒரே மாதிரியாக இருக்கிறது. 

இது அசல் இசையமைப்பாளர்களின் காப்புரிமையை மீறும் செயலாகும். 

எனவே ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பொன்னியின் செல்வன் 2 தயாரிப்பு நிறுவனங்கள் 2 கோடி ரூபாய் அபராத தொகையாக டெல்லி மேல் நீதிமன்றின் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டார். 

இதனை எதிர்த்து டெல்லி மேல்நீதிமன்றின் டிவிஷன் அமர்வில் பெஞ்சில் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு மேன்முறையீடு செய்தது. 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி மேல் நீதிமன்ற அமர்வு ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…