No products in the cart.
ப்ரீ புக்கிங்கில் OG படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கல்யாண். இவர் நடிப்பில் இந்த ஆண்டு ஹரி ஹர வீர மல்லு படம் வெளிவந்தது.
ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் They Call Him OG.
இப்படத்தை இயக்குநர் சுஜித் இயக்கியுள்ளார். இப்படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து பிரியங்கா மோகன், இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள இப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, OG திரைப்படம் இதுவரை உலகளவில் ப்ரீ புக்கிங்கில் ரூ. 116 கோடி வசூல் செய்துள்ளது.