உலகம்

ட்ரோன் ஊடுருவல் ; மூடப்பட்ட டென்மார்க் விமான நிலையம்!

டென்மார்க்கின் வடக்கே உள்ள ஆல்போர்க் விமான நிலையம், அதன் வான்வெளியில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன்கள் காணப்பட்டதை அடுத்து மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மூன்று சிறிய விமான நிலையங்களான எஸ்ப்ஜெர்க், சோண்டர்போர்க் மற்றும் ஸ்க்ரிட்ஸ்ட்ரப் ஆகியவையும் ட்ரோன் செயல்பாட்டுகள் குறித்து முறைப்பாடு அளித்துள்ளன. ஆனால் அவை மூடப்படவில்லை.

இந்த வார தொடக்கத்தில் நாட்டின் கோபன்ஹேகன் விமான நிலையம் ட்ரோன் ஊடுருவல் காரணமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது சம்பவமான விசாரணைகளை டென்மொர்க் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

திங்களன்று, கோபன்ஹேகனில் உள்ள காஸ்ட்ரப் விமான நிலையம் பல ட்ரோன்களைக் கண்டதைத் தொடர்ந்து பல மணி நேரம் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…