No products in the cart.
பெறுமதியான ஆபரணங்களை கொள்ளையிட்டவர்கள் கைது!
கணேமுல்ல பொலிஸ் பிரிவில் நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு 60 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடையில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய விசேட விசாரணையைத் தொடர்ந்து 17 மற்றும் 20 வயதுதான இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை உருக்கி தயாரிக்கப்பட்ட 121 கிராம் 350 மில்லிகிராம் மற்றும் 17 கிராம்15 மில்லிகிராம் நிறையுடைய இரண்டு தங்கத் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.