No products in the cart.
இலங்கையில் குரங்குகள் இடையே பரவும் நோய்!
பொலன்னறுவை மற்றும் கிரித்தலை ஆகிய பகுதிகளில் குரங்குகளால் சமூக நோய் ஒன்று பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வணக்கஸ்தல நகரத்தை அண்டிய பகுதிகளில் குரங்குகள் அதிகளவில் உலாவுவதால், மனிதர்களிடையே இந்த நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், எனவே பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நோய் மனிதர்களுக்கு பரவக்கூடிய அபாயம் இருந்தாலும் பொது மக்களிடையே இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மற்றும் கிரித்தலை பகுதிகளில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது.
இந்நிலையில் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குரங்குகள் மயக்கமூட்டி, மாதிரிகள் எடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.