நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், நேற்று 664 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின் போது 28,778 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 254 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 163 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த நடவடிக்கையின் கீழ், மது அருந்தி வாகனம் செலுத்துதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் தொடர்பாக 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.