No products in the cart.
பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் ஏஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று (29) பிற்பகல் மட்டக்குளிய பொலிஸ் பிரிவின் சிறிவர்தன வீதிப் பகுதியில் முன்னெடுக்கப்பட் சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 33 கிலோகிராம் 270 கிராம் ஏஸ், 408 கிராம் ஹெரோயின், 200 போதைப்பொருள் மற்றும் 7,400 ஹெரோயின் (சரஸ்) துண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மட்டக்குளிய, சமித்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என குறிப்பிடப்படுகிறது.
விசாரணையின் போது, சந்தேக நபர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மட்டக்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.