உலகம்

பிலிப்பைன்ஸை அதிர வைத்த நிலநடுக்கம் – பலர் உயிரிழப்பு

நேற்றிரவு மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில், செபு மாகாணத்தின் போகோ நகருக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .

நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 147 பேர் காயமடைந்துள்ளனர் மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

போகோ நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் இடிந்து, அங்கு கூடியிருந்தவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 

கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் வரலாற்று சிற்றாலயங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

செபு நகரில் சுமார் 10.6 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று உறுதியளித்துள்ளது. இருப்பினும் சிறிய கடல் அலை அச்சுறுத்தல் காரணமாக கடற்கரை பகுதிகளை விட்டு விலக இருந்ததாக அறிவுறுத்தியது.

What's your reaction?

Related Posts

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்நாட்டு அரசு…