No products in the cart.
டிங்கரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் “டிங்கர்” எனப்படும் ஸ்ரீதரன் நிரஞ்சன், கொழும்பு குற்றப்பிரிவில் தடுத்து வைத்து விசாரிக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேக நபரை நாளை (03) வரை 24 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசப் புலனாய்வுச் சேவை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் பொலிஸ் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், நேற்று (02) அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு, விமான நிலையக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பேலியகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதன்படி, சந்தேக நபர் நேற்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை கொழும்பு குற்றப்பிரிவில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.