No products in the cart.
காந்தாரா சாப்டர் 1 முதல் நாள் வசூல்!
ரிஷப் ஷெட்டி மற்றும் லேட்டஸ்ட் சென்சேஷனல் ருக்மிணி வசந்த் ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காந்தாரா சாப்டர் 1. 2022 ஆம் ஆண்டு மிக குறைவான எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி இந்தியளவில் அதிகம் பேசப்பட்ட படமாக மாறியது தான் காந்தாரா. 15 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை பெற்றது.
இதன் காரணமாகவே இப்படத்தின் அடுத்த பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. அந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. என்னதான் முதல் பாகத்தில் இருக்கும் ஒரு சில விஷயங்கள் இந்த பாகத்தில் குறைவதாக தெரிந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் காந்தாரா சாப்டர் 1 தரமான ஒரு படைப்பாகவே உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (02) வெளியான முதல் நாளில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். அதைப்பற்றியான விவரங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் நேற்று ஒரே நாளில் 65 கோடி வரை வசூல் செய்திருக்கின்றது.
மேலும் பல பெரிய படங்களின் முதல் நாள் வசூல் சாதனைகளையும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் முறியடித்துள்ளதாம். வார் 2, சையாரா, chhaava, சிக்கந்தர் போன்ற பல படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை இப்படம் தகர்த்தெறிந்துள்ளது. மேலும் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருவதால் மேலும் இப்படத்தின் வசூல் பலமடங்கு அதிகரிக்கும் என்றே தெரிகின்றது.
ஆனாலும் ஒரு சிலர் முதல் பாகம் போல இந்த பாகம் இல்லை என்றும் சொல்கின்றனர். முதல் பாகத்தில் இருந்த அந்த எமோஷன்ஸ் மற்றும் உணர்ச்சிகள் இப்பாகத்தில் சற்று மிஸ்ஸிங் என ஒரு சிலர் கூறி வருகின்றனர். என்ன இருந்தாலும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் நன்றாக தான் உள்ளது. முதல் பாகத்தை ஒப்பிடாமல் பார்த்தால் இந்த பாகம் சிறப்பான ஒரு படைப்பாகவே இருப்பதாக ரசிகர்கள் சொல்கின்றனர்.
இவ்வாறு ஒரு சில கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலேயே காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. பான் இந்திய அந்தஸ்தை பெற்று வெளியாகியிருக்கும் இப்படம் ஆயிரம் கோடி வசூலை குவிக்குமா என்ற ஒரு எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. கன்னட படமான காந்தாரா தமிழ் முதல் ஹிந்தி வரை அனைத்து மொழிகளிலும் சக்கைபோடு போட்டு வருகின்றது. குறிப்பாக ஹிந்தி மொழிகளில் மட்டும் இப்படம் 20 கோடி வரை வசூல் செய்திருக்கின்றது.
காந்தாரா சாப்டர் 1 ஹிந்தி மொழிகளில் சக்கைபோடு போடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இரண்டே நாட்களில் இப்படம் நூறு கோடி வசூலை அசால்டாக கடக்கும் என உறுதியாக தெரிகின்றது. அதுமட்டுமல்லாமல் இப்படம் ஆயிரம் கோடி வசூலை தொடவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துகொண்டு இருப்பதால் ஆயிரம் கோடி வசூல் சாதனை சாத்தியம் என்றே தெரிவது குறிப்பிடத்தக்கது.