No products in the cart.
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை, இன்று (04) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் அபாயத்தைக் குறைக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.